ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கிய 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நன்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 15 வயது சிறுவன் இன்று புதன்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் (வயது-15) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
உயிரிழந்தவர் உட்பட 5 பேர் கொண்ட நண்பர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கடலில் நீராடச் சென்றுள்ளனர் கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் இவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் காணாமல் போனவர் இன்று மாலை 7 மணியளவில் களுவன்கேணி கடலில் சடலமாக மிதப்பதை அவதானித்த மீனவர்கள் – கரைக்கு எடுத்து வந்ததனர்.
மீட்கப்பட்ட சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் – திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் , சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.