கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க சொகுசு கப்பல்

1000 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

600 அமெரிக்க பயணிகளும், 400 பணியாளர்களும் இக்கப்பலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பல் நாளை மறுதினம் திங்கட்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைய உள்ளது.