
மட்டுப்படுத்தப்பட்ட டீசல் விநியோகம் : 50 வீதமான பேருந்துகள் சேவையில்
தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சுப்பர் டீசல் கப்பலுக்கான எரிபொருளை இறக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தவிர மற்றுமொரு ஓட்டோ டீசல் கப்பல் இன்று வியாழக்கிழமை இரவு இலங்கைக்கு வரவுள்ளதுடன்,அதன் தரையிறக்கும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட டீசல் விநியோகம் காரணமாக நாளை முதல் பேருந்துகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சுற்றுலாத்துறையின் எரிபொருள் தேவை மற்றும் எரிபொருள் வழங்கும் முறை மற்றும் அது ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் சுற்றுலாதுறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் இன்று அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.