
ரோஹித ராஜபக்ஷவின் ஹோட்டலுக்கு தீ வைத்த சம்பவம் : நால்வர் கைது
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு சொந்தமான கொலன்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி கொலன்னாவில் உள்ள ஹோட்டலுக்கு சந்தேக நபர்கள் சொத்துக்களை திருடி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கொலன்னாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 25 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட கொலொன்ன பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொலன்னாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.