
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
கம்பஹா-படபொத பிரதேசத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 34 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.