நெற்செய்கைக்கு 70 வீத இரசாயன உரங்களையும் 30 வீத சேதன உரங்களையும் பயன்படுத்த தீர்மானம்

இப் பருவத்தில் 70 வீத இரசாயன உரங்களையும் 30 வீதமான கரிம உரங்களையும் பயன்படுத்தி நெல் பயிரிடுவது தொடர்பாக படலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெற்றியளித்துள்ளது.

100 வீதம் சேதன உரங்களைப் பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ளப்படாததால் கடந்த பருவத்தில் தோல்வியடைந்தமையினால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜயந்த டி சில்வா தெரிவித்தார்.

இதன்படி, அடுத்த பருவத்தில் நெற்செய்கைக்கு 70 வீத இரசாயன உரங்களையும் 30 வீத சேதன உரங்களையும் பயன்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க