
திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- மொரவெவ பிரதேசத்தில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்குளம் ஆறாம் வாய்க்கால் பகுதியில் உள்ள கடையை உடைத்து பணத்தை திருடிச் செல்வதாக பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் பன்குளம்-ஆறாம் வாய்க்கால் பகுதியில் உள்ள கடை உரிமையாளராக டபிள்யூ.ஜீ. ஹீம்பண்டா என்பவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது அவரிடமிருந்து 27820 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரத்மலான- குருபன பார பகுதியைச் சேர்ந்த சூரியகுமார் காண்டீபன் (32 வயது) எனவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டவர் எனவும், விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதுடன், குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.