கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக்குழு அங்குராப்பணக் கூட்டம்

-கல்முனை நிருபர்-

கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழுவிற்கான அங்குராப்பணக் கூட்டம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதி வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜே.மதன் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் இங்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் புதிய நிர்வாக குழுவிற்கான தெரிவும் இடம்பெற்றது.

புதியநிர்வாக குழு உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர் – ரி.சர்வானந்தன்
செயலாளர் – கே.சந்திரலிங்கம்
உப தலைவர் – இ.இராசரெத்தினம்
பொருளாளர் – எஸ்.தவராஜா ஆகியோரும்

நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக, அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு எஸ்.காந்தரூபன், வி.பிரபாகரன் கே.நடராஜா, டபிள்யூ.பி.சிறிசேன, டி.பெஞ்சமின், ஏ.நிர்மலகுமார், ரி.ஜெயரதன், ரி.தியாகலிங்கம், இ.சந்திரசேகரம், பி.ஜெனித்தா டி.றொசாயிறோ ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

குறித்த அபிவிருத்திக் குழுவானது எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் சமுக விடயங்கள் சார்ந்த செயற்பாட்டில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க