
பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு
-கல்முனை நிருபர்-
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் PSSP செயற்றிட்டத்தின் கீழ் தெரிவான அக்கரைப்பற்று – பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் அபிவிருத்திப்பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எம்.பி. அப்துல் வாஜித், பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர், பனங்காடு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி, வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.