
நாட்டில் வேகமாக பரவும் புதிய வகை வைரஸ்
இலங்கையில் முதன்முறையாக வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் BA 5 வகை கொவிட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தா தெரிவித்துள்ளார்.
வேகமாகப் பரவிவரும் இந்த வகையினால் எதிர்காலத்தில் நாட்டில் மோசமான நிலைமை ஏற்படக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று உலகில் வேகமாகப் பரவிவரும் கொவிட் வகை இதுவே என்று குறிப்பிட்ட அவர் இதன் காரணமாக நாட்டில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக கொழும்பை அண்மித்த பகுதிகளில் இந்த தொற்று கிளையினம் பொதுவாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.