
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த கொடியேற்ற மகோற்சவ பெருவிழா கடந்த 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்று புதன்கிழமை ஒன்பதாம் திருவிழா தேர் திருவிழா மிகச் சிறப்பான முறையில் சுகாதார நடைமுறைக்கு அமைவாக பல ஆயிர அடியார்கள் புடைசூழ வடம் பிடித்து தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
நாளை வியாழக்கிழமை பத்தாம் திருவிழா ஆடி அமாவாசை விரத நிகழ்வு நடைபெற உள்ளதால், ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் சிறப்பான முறையில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.