
நாட்டில் மீண்டும் கொவிட் அபாயம் : ஒரே நாளில் 5 பேர் பலி
இலங்கையில் கொவிட் தொற்றுக் காரணமாக நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 5 பேரின் இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொவிட் காரணமாக இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 16544 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை நேற்று மாத்திரம் 75 பேர் கொவிட் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இன்று மாத்திரம் 119 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.