
QR code படுத்தும் பாடு : பல விதமாக QR code அட்டைகள்
-யாழ் நிருபர்-
நாடளாவிய ரீதியில் எரிபொருள் அனுமதி அட்டைககளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டினை பயன்படுத்தி, வாகன கடைசி இலக்கத்துக்கு அமைவாக எரிபொருள் வழங்கும் நடைமுறை இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், குறித்த QR குறியீட்டை கைப்பேசியில் வைத்திருப்பதன் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காண்பித்து எரிபொருளை பெற முடியும்.
ஆகவே QR குறியீட்டினை கவனமாக வைத்திருப்பதற்கு பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை சாரதிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக QR குறியீட்டினை தலைக்கவசத்திலும் பல்வேறு வடிவங்களிலும் அச்சுப்பதித்து வருகின்றனர்.