
கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரண பட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வட்டபொல பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் வீட்டில் தனியாக வசித்து வருவதுடன், கழுத்தில் வெட்டுக் காயம் காணப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரேதப் பரிசோதனை இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.