
நல்லையம்பதி அலங்காரகந்தசாமி ஆலய வருடாந்த கொடியேற்றத்தினை முன்னிட்டு காளாஞ்சி வழங்கும் நிகழ்வு
-யாழ் நிருபர்-
வரலாற்றுச்சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்காரகந்தசாமி ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றத்தினை முன்னிட்டு காளாஞ்சியினை வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இன்று காலை இடம்பெற்றது
ஆலயத்தில் மரபு ரீதியான பண்பாட்டினை வெளிப்படுத்தும் முகமாக இவ் காளாஞ்சி எடுத்து வரப்பட்டது.
ஆலயத்தில் இருந்து மாட்டுவண்டியுடாக பருத்தித்துறைவீதியுடாக சென்று அங்கு இருந்து சட்டநாதர் வீதியுடாக சென்று நல்லூர் செங்குந்த மாப்பாண்ட வைரவர் ஆலயத்தின் வரை சென்று கொடிச்சீலை வரையும் செங்குந்த மார்ப்பாண்ட குடும்பத்தினர்களிடம் இக் காளாஞ்சி கையளிக்கப்பட்டது
இதனை ஆலயத்தின் பிரதம குருக்களாகிய சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் மற்றும் பிரசன்னா குருக்கள் இவ் காளாஞ்சியினை வழக்கி வைத்தனர்.
நல்லையம்பதி அலங்காரகந்தனின் மஹோற்சவ கொடியேற்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆந் திகதி அன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஆகஸ்ட் 27 அன்று இனிதே கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் நிறைவடையும்.
இவ் காளாஞ்சி வழங்கிவைக்கும் நிகழ்வில் பக்தர்கள் பலரும் பங்குபற்றினர்கள்..