
யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவு தினம் அனுஷ்டிப்பு
-யாழ் நிருபர்-
தமிழர்கள் பலரும் கொல்லப்பட்ட கறுப்பு ஜூலையின் 39வது ஆண்டு நினைவேந்தல் இன்று சனிக்கிழமை யாழ்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் யாழ். பல்கலைக்கழகத்திலும் கறுப்பு ஜூலையின் 39வது ஆண்டு நினைவேந்தலானது யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபிக்கு முன்பாக நடைபெற்றது.
இதன்போது ஈகைச் சுடரேற்றி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
1983ம் ஆண்டு தமிழர்கள் பலரும் கொல்லப்பட்ட இந்நாள் கறுப்பு ஜூலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.