
விபத்திற்குள்ளான எரிபொருள் பௌசர் : எரிபொருளை எடுக்க கூடிய பிரதேசவாசிகள்
மீரிகஹா ஹலுகம பிரதேசத்தில் டீசல் ஏற்றி வந்த பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மீரிகமவில் இருந்து வரகாபொல நோக்கி டீசல் ஏற்றிச் சென்ற வாகனம் இன்று சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, பெருமளவிலான பிரதேசவாசிகள் குறித்த பௌசரிலிருந்து எரிபொருளை எடுக்க அவ்விடத்தில் கூடியதாகவும், பொலிஸாரும் இராணுவத்தினரும் பிரதேசவாசிகளை அவ்விடத்திலிருந்து வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறுகிய வீதியில் பயணித்த போது, மற்றுமொரு வாகனத்திற்கு இடம் விடுவதற்காக பின்னோக்கிச் செல்லும் போது, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.