நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று சனிக்கிழமை 100,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அவற்றில் 75,000 எரிவாயு சிலிண்டர்களை கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக, லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.