எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒழுங்கீனம் : மக்கள் விசனம் தெரிவிப்பு

-யாழ் நிருபர்-

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகம் செய்யும்போது ஒழுங்கீனம் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை 6,7,8,9 ஆகிய இறுதி இலக்கம் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கே பெற்றோல் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

ஆனால் வேறு இலக்கம் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கும் பெற்றோல் நிரப்பப்பட்டது.

இதனால் அங்கு ஒழுங்கீனம் ஏற்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

அத்துடன் அடுத்த நாட்களுக்கு உரிய இலக்கங்களை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

அத்துடன் சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எரிபொருள் அட்டையினை கண்காணிக்கும் பணியினை மேற்கொள்வதற்கு அவ்விடத்திற்கு வந்திருந்தனர்.

ஆனால் அவர்களை அந்த பணியில் ஈடுபட அனுமதிக்காமல் கூட்டுறவு சங்க ஊழியர்களே குறித்த பணியில் ஈடுபட்டனர். இதனால் பிரதேச செயலக ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர்.