
மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் மெற்றிக் டன் அரிசி கல்வி அமைச்சிடம் கையளிப்பு
500 மில்லியன் யுவான் மெதிப்பிலான இரண்டு தொகுதிகளை கொண்ட 500 மெற்றிக் டன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முதலாவது அரிசி தொகுதி கடந்த 16ஆம் திகதியும், இரண்டாவது தொகுதி 19 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ் 7,900 பாடசாலைகளில், 1.1 மில்லியன் சிறார்களுக்காக 3 ஆயிரம் மெற்றிக் டன் அரிசி கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.