சுதந்திரபுரம்-உடையார்கட்டு இனப்படுகொலையின் 24 வது ஆண்டு நினைவேந்தல்

-கிளிநொச்சி நிருபர்-

சுதந்திரபுரம் உடையார்கட்டு, இனப்படுகொலையின் 24வது ஆண்டு நினைவு அஞ்சலி இன்று வெள்ளிக்கிழமை சுதந்திரபுர சந்தியில் இடம்பெற்றது.

நிகழ்வின் பொது சுடர் சுதந்திரபுரத்தில் நிகழ்ந்த வான்படை தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையினால் ஏற்றப்பட்டது.

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, உக்ரைன் நாட்டு விமான ஓட்டுனரால் வான் தாக்குதல் 1996.06.10 ஆந் திகதி நடாத்தப்பட்டது.

இதில் பொதுமக்கள் பலர் கொடூரமாக உயிரிழந்தனர். சிலர் அங்கவீனமாகியும் உள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் பொதுமக்களும்‌, சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.