அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை

அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 20 இற்கும் மேற்பட்ட தனியார் பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் அலரிமாளிகையில் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வாடகை அடிப்படையிலும் சிலர் தனிப்பட்ட இலாப நோக்கத்திற்காகவும் இவ்வாறு பஸ்களை வழங்கி இருந்ததாகவும் தெரிவித் அவர், இனி வரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்போவதில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.