கொழும்பில் பல வீதிகளுக்கு இரும்பினாலான வீதித்தடைகள்
அம்புலன்ஸ் வண்டிகள் உட்பட எந்தவொரு வாகனமும் பயணிக்க முடியாதவாறு கொழும்பில் பல வீதிகள் இரும்பு வேலிகளைக் கொண்டு பின்னப்பட்டுள்ளமை குறித்த பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் முக்கிய வீதிகள் பலவற்றின் ஊடாக பயணிக்க முடியாத வகையில், இரும்புக் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு கூட நடந்து செல்லமுடியாது.
வேறு வழிகளின் ஊடாக நடந்துவந்து இரும்புக் கம்பி வேலிக்கு அருகில் சிக்கிக்கொள்ளும் மக்கள், இரும்புக் கம்பி வேலிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் நுழைந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.