மட்டக்களப்பு-தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சங்காபிஷேகம்

மட்டக்களப்பு மாவட்டம் தேற்றாத்தீவு வட பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார திருச்சடங்கின் பாற்குடபவனியும், சங்காபிஷேகமும் பக்தி பூர்வமாக, நடைபெற்றது.

தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி அடியார்களால் எடுத்து வரப்பட்டு வட பத்திர காளிக்கு பாலபிஷேகம் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் இன்று விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி , 1008 சங்குகளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து, உள் வீதி உலா வந்து, சங்காபிஷேகம் நடைபெற்றது.