மகளிர் தினத்தில் கொழும்பில் மகுடம் சூடும் பெண்கள்

கலை,இலக்கியம் ஊடகம் மற்றும் சமூகப் பணிகள் குறித்த விடயங்களில் இளையவர்களை ஊக்குவிப்பதை பிரதானமான நோக்கமாக கொண்டு பாரம்பரியம் மிக்க அமைப்பாக தலைநகரில் இயங்கி வரும் புதிய அலை கலை வட்டம் அதன் மகளிர் அணி மூலமாக வருடாந்தம் மகளிர் தின நிகழ்வை நடத்தி வருகின்றது.

அந்த வகையில் இவ்வாண்டுக்கான நிகழ்வு விபரம்

தினம்’-07.03.2026
இடம்-கல்யாண முருகன் மண்டபம், செட்டியார் தெரு, கொழும்பு-11
நேரம்- பி.பகல்1.30 மணி

அதிதிகள்

இவ் விழாவில் அரசியல் மற்றும் கலை இலக்கிய சமுகப்பணிகளில் சிறந்த முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

பிரதம அதிதி
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கெளரவ திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ்.
முன்னிலை
தொழில் அதிபர் இலக்கியவாதி
பி.எஸ்.செல்வரட்ணம்
கெளரவ அதிதி
தமிழகம் புதுக்கோட்டை தமிழ் சங்கத் தலைவரும் கவிஞருமான தங்கம் மூர்த்தி.

இந் நிகழ்வின் பிரதான அம்சமாக வீரவனிதையர் என்ற என்ற மகுடத்தில் பெண்களுக்கான கெளரவிப்பும் நடைபெறவுள்ளது.

இதில் திருமதி ஹேமலோஜினி குமரன், திருமதி பி.எம்.நந்தனி தம்மிக்க, திருமதி கே.வேல்ராணி, திருமதி ஜெனிதா மோகன்,திருமதி சாமலா நிரஞ்சன், செல்வி சமந்தி சந்திரசேகரம்,திருமதி கே.தவமலர், செல்வி துவாரகா லக்ஷ்மி ரவீந்திரகுமார், திருமதி சாருலதா பாலகிருஷ்ணன், திருமதி காயத்ரி அரவிந்த், திருமதி பரிமளா துரைராஜ், டாக்டர் கங்கா லக்ஷ்மி, திருமதி கே.சசிகலா,திருமதி ஜெயசீலி தவராஜா
திருமதி டி.திலிபமாலா, திருமதி பி.லோகேஸ்வரி திருமதி ராதா ஞானரெத்தினம் , செல்வி வருணிக்கா சிவகுமாரன், செல்வி சாய்சக்தி சர்வி மற்றும் மெஹமட் தமீம் மரின் ஆகியோர் கெளரவம் பெறுகின்றனர்.

நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு உலர் உணவு நிவாரணங்களும் பரிசுப்பொருள்களும் வழங்கி வைக்கப்பட வுள்ளது.

விசேட அம்சம்
நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.