
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை , குறித்த சிறுவன் உட்பட மூவர் அல்லைப்பிட்டி பகுதியால் வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தவேளை, வீதி கடமையில் இருந்த பொலிஸார் அவர்களை வழி மறித்தனர்.
பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்தமையால், பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தினர்.
துப்பாக்கி சூட்டில் சித்தங்கேணியை சேர்ந்த சிறுவன் பலியாகியுள்ளார்.
சிறுவனுடன் பயணித்த நல்லூர் மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த இருவர், ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
