ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமைமாலை பதிவானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிக்ச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொலைசெய்யப்பட்டவர் பிடபொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இந்தக் கொலை நடந்திருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணமும் சந்தேக நபர்களின் அடையாளமும் இன்னும் வெளியாகவில்லை என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
