
அட்டாளைச்சேனையில் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு
-அம்பாறை நிருபர்-
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையில் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு அட்டாளைச்சேனை பிரதேச சபை கெளரவ தவிசாளர் எம்.என்.எம் றம்சான் தலைமையில் அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் வழிகாட்டலில் நிகழ்வு இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு நிகழ்வு செயலமர்வு க்கு அதிதியாக அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டதுடன் இந்த நிகழ்ச்சிக்கு பிரதான வளவாளராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் முஹம்மட் ஸாஜித் ஸமான் அத்துடன் மற்றும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களான எஸ்.எம் றஸ்லான்,ஐ.எல் மர்ஜூன்,ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.
இதன் போது நூகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக வியாபாரிகளுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.
