பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அன்றைய தினமே அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று வெள்ளிக்கிழமை இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு இசைவானதாகக் கண்டறிந்து, பிரிவு 121(1) இன் கீழ் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக தெரிவித்தார்.