
ஆப்பிளின் அதிரடி மாற்றம்: 2026 இல் அறிமுகமாகிறது முதல் மடிக்கக்கூடிய ஐ போன்
ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புத் திட்டங்களில் பாரிய மாற்றங்களைச் செய்து வருவதாக நிக்கேய் ஏசியா (Nikkei Asia) செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி 2026 ஆம் ஆண்டு ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமையவுள்ளது.
ஆப்பிள் தனது வரலாற்றிலேயே முதன்முறையாக மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை 2026 இன் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதனுடன் சேர்த்து, மேம்படுத்தப்பட்ட கெமராக்கள் மற்றும் பெரிய திரைகளைக் கொண்ட மேலும் இரண்டு உயர்தர (Flagship) மாடல்களையும் வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் சாதாரண iPhone 18 மாடலின் அறிமுகம் 2027 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மெமரி சிப்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வால், அதிக லாபம் தரும் உயர்தர போன்களில் ஆப்பிள் கவனம் செலுத்துகிறது.
மடிக்கக்கூடிய திரைகளைத் தயாரிப்பதில் உள்ள சிக்கலான தொழில்நுட்ப சவால்களைச் சமாளிக்கவும், உற்பத்தி அபாயங்களைக் குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகளைத் தவிர்த்து, வளங்களைச் சரியாகப் பயன்படுத்துவதே ஆப்பிளின் நோக்கமாக உள்ளது.
