மன்னாரில் பாடசாலையின்  2025/2026 ஆம் ஆண்டுக்கான சிரேஷ்ட மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைப்பு

-மன்னார் நிருபர்-

மன்னார் பேசாலை புனித பற்றிமா ம.ம.வித்தியாலய பாடசாலையின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான சிரேஷ்ட மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று  வெள்ளிக்கிழமை காலை பாடசாலை அதிபர் தலைமையில்  நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  இப்பாடசாலையின்  பழைய மாணவரும் மன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பிரதி அதிபராகிய  சேவியர் அஜித் ருக்சன் டலிமா   கலந்து சிறப்பித்தார்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கு வைபவ ரீதியாக சின்னம் சூட்டப்பட்டது.