இலங்கையின் பால் உற்பத்தி வீழ்ச்சி

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேசிய கால்நடை மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 2,000 லிட்டராக பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேசிய கால்நடை மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது..

திக்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால், சிலாபம் பகுதியில் உள்ள பால் உற்பத்தி நிலையம் ஒன்று முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் அங்கு கால்நடைகளுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை என்றும் தேசிய கால்நடை மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.