பங்களாதேஷில் நில அதிர்வால் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி!

பங்களாதேஷ் தலைநகர் அருகே இன்று வெள்ளிக்கிழமை காலை 5.7 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது.

இதனால் ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறவிருந்த பங்களாதேஷ்-அயர்லாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டாக்காவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் மாதப்டி பகுதியில் இந்த நிலஅதிர்வு மையம் கொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. இருப்பினும், இதுவரை பெரிய சேதம் அல்லது உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மைதான அதிகாரிகள் நிலைமையை மதிப்பிட்டபோது ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது, மேலும் எந்த பாதிப்பும் இல்லை என்று தீர்மானிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே போட்டி மீண்டும் தொடங்கியது.