திருகோணமலையில் பல இடங்களில் கனமழை!

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலையில் மிக நீண்ட நாட்களின் பின் கனமழை பெய்து வருகின்றது.

விவசாயிகள் நெற் செய்கைக்காக தயாராகவுள்ள நிலையில் தீபாவளி தினமான இன்று திங்கட்கிழமை கன மழை பெய்து வருகிறது.

தம்பலகாமம்,கிண்ணியா,முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதுடன் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.