
ஐ.ம.சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக ருவேஸ் ஹனிஃபா!
கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவேஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில்
கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லையில் வாழும் அனைவரினதும் எதிர்பார்ப்பு அபிவிருத்தியடைந்த நகரமொன்றை உருவாக்குவதேயாகும்.
இதன் நிமித்தம் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் கொழும்பு மேயர் வேட்பாளராக வைத்திய கலாநிதி ருவைஸ் ஹனிபாவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகிறோம்.
தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், திறமையானவரும், தைரியம் வாய்ந்தவரும் என சகல குணங்களும் நிறைந்த முற்போக்கு ஆளுமையாக திகழ்ந்து வருகிறார், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
