
இலங்கைக்கு அதிகமாக சுற்றுலா வரும் இந்தியர்கள்!
இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 97,322 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த வருடத்தின் கடந்த நாட்களில் ஐந்து இலட்சத்து 90,300 வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மாத்திரம் இந்தியாவிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும் இந்தியாவிலிருந்து 14, 848 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றனர்.
ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது