
சிறைச்சாலை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு
காலி அக்மீமன பகுதியில் சிறைச்சாலை அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் ஒருவர் பலியானார்.
மேலும் சந்தேக நபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் இரண்டு மோட்டார்சைக்கிள்களும், 3 தலைக்கவசங்களும் யக்கலமுல்ல பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபர் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சேவையிலிருந்து விலகியிருந்தார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுக்காக 9 மில்லிமீற்றர் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.