
புதிதாக வாங்கிய கார்: ஜன்னலில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் காரின் தானியங்கி ஜன்னலில் சிக்குண்ட ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக வாங்கிய காருக்கு பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காரை இயக்கியவுடன் தானியங்கி ஜன்னல் மூடியதால் வெளியில் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்து ஜன்னலில் இறுகி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.