கல்லூரி வளாகத்தில் அகற்றப்படாமல் இருக்கும் வெட்டிய மரக்கிளைகள்

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் பாதிப்பு ஏற்படுத்தகூடிய வகையில் காணப்பட்ட மரக்கிளைகளை மரக்கூட்டுத்தாபனம் வெட்டிய நிலையில் அவற்றை அகற்றாமல் ஒரு மாத காலம் வரை வளாகத்திலேயே காணப்படுகின்ற நிலையில் 1 இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கின்ற பாடசாலையில் குறித்த மரக்கிளைகள் மாணவர்களுக்கு இடையூறாக காணப்படுகின்றது.

மேலும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் உடனடியாக குறித்த மரக்கிளைகளை அகற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக பாடசாலையின் முதல்வரை தொடர்பு கொண்டு கேட்டபோது மரக்கூட்டுத்தாபனம் பாடசாலை மரத்தின் கிளைகள் மற்றும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்த போது சில மரங்களை பாடசாலை பழைய மாணவர்கள் வெட்ட வேண்டாம் என கோரிக்கை விடுத்தமையால் ஏற்கனவே வெட்டப்பட்ட கிளைகளையும் அகற்றாமல் சென்று விட்டார்கள் .

இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172