
மட்டக்களப்பு – கரடியனாற்றில் 31 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு – கரடியனாறு பாடசாலையை சேர்ந்த 31 மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக குறித்த மாணவர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் சில மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.