
புதையல் தோண்டிய இளைஞன் கைது
பொலன்னறுவை – வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹிந்தகம பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இளைஞன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகந்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிகந்த – அசேலபுர பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.