யூடியூபர் கிருஷ்ணா உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

யூடியூபர் கிருஷ்ணா உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த யூடியூபர் உதவி செய்யும் காணொளிகளை வலையொளி பக்கத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் ஒரு வீட்டிற்கு சென்று அநாகரீகமாக நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் அவர் உட்பட நால்வர் நேற்றையதினம் அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றவேளை ஊர் இளைஞர்கள்  மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கமைய, அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24