
பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலு சாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மலையகத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் இன்றைய குழு நிலை விவாதத்தில் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தை எந்த வகையிலும் குற்றஞ்சாட்ட முடியாது எனவும் இதுவே தேசிய மக்கள் சக்தியின் ஆரம்பம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த வருட பாதீட்டின் போது தாம் குறிப்பிட்டவைகள் உள்வாங்கப்படவில்லை எனில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.