இரண்டு வருடங்களாக சேதமடைந்துள்ள மின்சார தூண்

மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு பிரதேசத்தில் இரண்டு வருடங்களாக மின்னாசார தூண் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோராவெளி கிராமத்தில் யானைகளால் குறித்த மின்சார தூண் சேதப்படுத்தபட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதன் மூலம் உயிர் இழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் இவற்றை கவனத்தில் கொண்டு சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24