
உலகளாவிய ராமகிருஷ்ண மடம், மிஷனின் துணைத்தலைவர் மட்டக்களப்பு விஜயம்
உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத்தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.
சுவாமி நேற்று மாலை 4.30 மணியளவில் கல்லடி மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து பவணியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் வரையில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் பேண்ட் வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்டார்.
அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் நேற்று வெள்ளிக்கிழமை முதல் நாளை மறுதினம் திங்கட்கிழமை வரை தனது மட்டக்களப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
மேலும் தினசரி இரவு 7.15 மணிக்கு பக்தர்கள் சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.