மட்டக்களப்பு வேலூரில் சர்வதேச உளவியல் சார் கற்கைகள் நிலையத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு கல்லடி வேலூரில் அமைந்துள்ள சர்வதேச உளவியல் சார் கற்கைகள் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் இரண்டு வருட கற்கை நெறி நிறைவை முன்னிட்டு உளவியல் சார்ந்த மாணவர்களின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

உளவியல் மற்றும் உளவளத்துணை உயர் டிப்ளோமா பாடநெறி ஆரம்ப கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஜி.கே அப்துல்லாஹ் மற்றும் கௌரவ விருந்தினர்களாக ஐ. எம் .யு பல்கலைக்கழக இலங்கைக்கான கல்வி விவகார மற்றும் கலாச்சார விவகாரத்தின் தலைவர்களான ஏ. எம்.பர்வான் இஃபஹீர் முகமது, சிறப்பு விருந்தினராக கிராம சேவை உத்தியோஸ்தர் ஜீவிதா வேந்தன், முன்னாள் மாணவர் சபை உறுப்பினர் சுபராஜ் ஆகியோர் கலந்து கொண்டதோடு அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்