ஐஸ் போதைப் பொருள் விற்பனை: சந்தேக நபர் கைது

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்புத் தரவை 01 பகுதியில் வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது 37 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 770 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டது. சந்தேக நபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ. நஸார் தலைமையிலான குழுவினர் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்