சாணக்கியன் உட்பட 7 பேருக்கு தடை உத்தரவு
மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆர்ப்பாட்டம் அல்லது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாதென மட்டக்களப்பு பொலிஸாரால் சாணக்கியன் உட்பட 7 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திர தின நிகழவுகள் நாளை செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பில் சுதந்திர தின நிகழ்வுகளை குழப்பும் வகையில் செயற்பட தடை விதித்து சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத், சீலன், உட்பட 7 பேருக்கு தடை உத்தரவு இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்