கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டம் பசறையில் ஆரம்பம்
கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரட்ணவின் தலைமையில் பசறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், சுகாதார அதிகாரிகள், தபால் நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பசறை நகர் பகுதியில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்போது வீதியில் காணப்பட்ட குப்பைகள் மற்றும் வடிகான்களில் காணப்பட்ட குப்பைகளும் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்