பசறை கோணக்கலை தமிழ் பாடசாலைக்கு செல்லும் வீதியின் நிலை: மக்கள் கவலை

-பதுளை நிருபர்-

பதுளை – பசறை கோணக்கலை தமிழ் பாடசாலைக்கு செல்லும் வீதியில் 150 மீற்றர் தூரம் வரை வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியில் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதாகவும் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் வாகனம் செல்வதில் பாரிய இன்னல்கள் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலைக்கு மேற்பகுதியில் சுமார் 200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும் அவர்களும் அவ்வீதியினூடாகவே பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி குறித்த வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்